மோடி - அகிலேஷ் யாதவ் - யோகி ஆதித்யநாத் PT Web
இந்தியா

அயோத்தி பைசாபாத் தொகுதியில் ஆட்டம் கண்ட பாஜக – அமோக வெற்றி பெற்ற சமாஜ்வாதி கட்சி

பாஜகவின் வெற்றி பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட் அயோத்தி பைசாபாத் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக தோல்வியடைந்துள்ளது.

நிரஞ்சன் குமார்

பாஜகவின் வெற்றி பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் மிக முக்கியமானது அயோத்தி பைசாபாத் தொகுதி. இந்த தொகுதியில் பாஜக சார்பில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற லல்லு சிங் களம் இறக்கப்பட்டிருந்தார். அதே நேரத்தில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் அவதேஷ் பிரசாத் களம் கண்டார். ராமர் கோவில் திறப்பு உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து பாஜக தீவிரமாக தேர்தலை சந்தித்த நிலையில், அந்த தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளது.

ராகுல், மோடி

“காங்கிரஸ் சமாஜ்வாதி கூட்டணிக்கு வாக்களித்தால் அவர்கள் ராமர் கோவிலை புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளி விடுவார்கள்” என பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரங்களில் பேசியது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே அயோத்தி தொகுதியில் சமாஜ்வாதி வெற்றி பெறும் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.