இந்தியா

5 மாநிலங்களில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

5 மாநிலங்களில் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

webteam

தேர்தல் முடிவுகள் ‌வெளியாகியுள்ள நிலையில் ஐந்து மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல்கள் சென்ற மாதம் 12ஆம் தேதி தொடங்கி கடந்த 7ஆம் தேதி வரை நடந்தன. பெரும்பாலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி ஐந்து மாநில தேர்தலும் அமைதியாக நடந்து முடிந்தது. இறுதியாக நேற்று வாக்க்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் மிசோசரமில் மாநில கட்சியான எம்.என்.எஃப் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. தெலங்கானாவில் ஆளும் மாநில கட்சியான சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. 

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள்  தொடர்பாக ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேசத்தில், நீண்ட இழுபறிக்குப் பின் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் சூழலில் இதுகுறித்து ‌கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. மேலும் ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 99 தொகுதிகளை வென்று காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. 5 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் நிலையில் இதுகுறித்து‌ காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. 

இதனையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் இன்று நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது. மேலும் தெலங்கானா, மிசோரம் மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி குறித்தும் கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.