இந்தியா

பாலிசிதாரர்கள் கவனத்திற்கு! காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க எல்.ஐ.சி.யின் புதிய திட்டம்!

பாலிசிதாரர்கள் கவனத்திற்கு! காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க எல்.ஐ.சி.யின் புதிய திட்டம்!

webteam

காலாவதியாகிவிட்ட பாலிசிகளை மீண்டும் புதுப்பித்துக் கொள்வதற்கான திட்டத்தை எல்.ஐ.சி அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்திய ஆயுள் காப்பீட்டு கழகமான எல்.ஐ.சி (LIC) வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரீமியம் தொகை செலுத்தாமல் காலாவதியான பாலிசிகளை வாடிக்கையாளர்கள் மீண்டும் புதுப்பித்துக்கொள்வதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17-ஆம் தேதி தொடங்கிய இந்த திட்டம் வரும் அக்டோபர் 21- ஆம் தேதி வரை இந்த சிறப்பு பாலிசி புதுப்பிப்பு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடைசி பிரீமியம் செலுத்தி 5 ஆண்டுகள் வரை ஆன பாலிசிகளை தவிர அனைத்து பாலிசிகளையும் இத்திட்டத்தின் கீழ் புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 லட்சம் வரையிலான நிலுவைத்தொகை இருந்ததால் 25 சதவீதமும் அதற்கு மேல் இருந்தால் 30 சதவீதமும் தாமதக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு கால தாமத கட்டணத்திற்கு 100 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.