ஏடிஎம் மையங்களில் எடுக்கும் பணத்தின் அதிகபட்ச வரம்பு ரூ.4,500-லிருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மேலும், சேமிப்பு கணக்குதாரர்களுக்கான இந்த உச்சவரம்பு மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேபோல, நடப்பு கணக்கிலிருந்து வாரத்துக்கு எடுக்கப்படும் பணத்தின் உச்சவரம்பு ரூ.50,000-த்திலிருந்து ஒரு லட்ச ரூபாய் எடுத்துக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.