அதிஷி எக்ஸ் தளம்
இந்தியா

டெல்லி| முதல்வராகப் பதவியேற்றார் அதிஷி.. 5 அமைச்சர்களும் பதவியேற்பு!

டெல்லி முதல்வராக அதிஷி இன்று பதவியேற்றார். அவருடன் 5 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

Prakash J

மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் பெற்ற அரவிந்த் கெஜ்ரிவால், தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதற்கிடையே, புதிய முதல்வராக அதிஷி தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து கெஜ்ரிவால் ராஜினாமா கடிதத்தை அளித்த நிலையில், முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அதிஷி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தையும் அளித்தார். இருவரின் கடிதத்தையும் துணைநிலை ஆளுநர் சக்சேனா அனுப்பிவைத்த நிலையில், கெஜ்ரிவாலின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார்.

மேலும், டெல்லி முதல்வராக அதிஷி பதவியேற்க குடியரசுத் தலைவர் திரளபதி முர்மு ஒப்புதல் அளித்தார். அதன்படி, இன்று டெல்லி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அதிஷி புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அதிஷிக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதன்மூலம் டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வாராக ஆகியிருக்கிறார் அதிஷி. அவருடன் சௌரம் பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த பதவியேற்பு விழாவில் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இன்னும் சில மாதங்களில், டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்க இருக்கிற நிலையில், அதிஷி குறுகிய காலம் மட்டுமே முதல்வர் பதவியில் இருப்பார்.

இதையும் படிக்க; திருப்பதி லட்டு விவகாரம்| பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் அட்வைஸ்!