இந்தியா

தமிழக கேரள எல்லையில் வெட்டுக்கிளிகள்?: விளக்கமளித்துள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர்!!

தமிழக கேரள எல்லையில் வெட்டுக்கிளிகள்?: விளக்கமளித்துள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர்!!

webteam

தமிழக கேரள எல்லையில் வெட்டுக்கிளிகளால் எவ்வித சேதமும் இல்லை என தோட்டக்கலை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தமிழக கேரள எல்லையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பதாகவும், பயிர்களை சேதப்படுத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகின. இது குறித்து கூடலூர் - நீலகிரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், தமிழக கேரள எல்லையில் வெட்டுக்கிளி கூட்டம் பயிர்களை சேதப்படுத்தி வருதாக செய்தி வெளியானது. இதனையடுத்து தமிழக-கேரள எல்லையில் ஆய்வு மேற்கொண்டதில் வெட்டுக்கிளிகளால் எவ்வித சேதமும் இல்லை என்ற விபரம் தெரியவந்தது.

மேலும் இது குறித்து கேரள விவசாயத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டதில், அங்கு புல்பள்ளி பகுதியில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் ஆலர்சஸ் மில்லேரியஸ் என்னும் தாவர பெயர் கொண்ட புள்ளி வெட்டுக்கிளிகளே காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது காப்பி லோகஸ்ட் என்னும் பொதுப்பெயரைக் கொண்டது. இது பயிர் சேதம் ஏற்படுத்தும் லோகஸ்ட் வகையை சேர்ந்தவை அல்ல.

இவை இலைகளை மட்டுமே உன்பதால்பயிர் சேதம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது அவை இளம் பருவத்திலிருந்து பெரிய வெட்டுக்கிளிகளாக மாறி வருவதாக் அவைகள் இடம் பெயர்ந்து வருகின்றன என்ற விபரம் கேரள வேளாண்மைத்துறை அதிகாரி அவர்களால் தெரிவிக்கப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.