கேரளாவில் பூனையை சாப்பிட்ட அசாம் இளைஞர் pt desk
இந்தியா

கேரளா: “சாப்பிட்டு நாலு நாளாச்சு” – பசியால் பூனையை பச்சையாக சாப்பிட்ட அசாம் மாநில இளைஞர்

கேரளாவில் பசி தாங்க முடியாமல் அசாம் மாநில இளைஞர் ஒருவர் பூனையை பச்சையாக சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

webteam

செய்தியாளர்: S.சுமன்

கேரளா மாநிலம் குட்டிபுரம் பேருந்து நிலையம் அருகே, இளைஞர் ஒருவர் பூனையை பச்சையாக சாப்பிட்டுக் கொண்டு இருந்துள்ளார். இதைக் கண்ட அப்பகுதி மக்கள் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், பசியின் காரணமாகதான் என்று பதிலளித்தாகக் கூறப்படுகிறது.

கேரளாவில் பூனையை சாப்பிட்ட அசாம் இளைஞர்

இந்நிலையில், அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பழம் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கி அந்த இளைஞருக்கு கொடுத்து அவர் கையில் இருந்த பூனையின் இறைச்சியை கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து காவல் துறையினர் வாங்கிக் கொடுத்த உணவை சாப்பிட்ட இளைஞர், சிறிது நேரத்தில் யாரிடமும் சொல்லாமல் கூட்டத்தில் தலைமறைவானார். இதையடுத்து காவல் துறையினர் அவரை தேடி வந்த நிலையில், குட்டிப்புரம் ரயில்வே நிலையம் அருகே அவரை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், 4 நாட்களாக ஒன்றுமே சாப்பிடாததால் இப்படி நடந்து விட்டது என்பதும் தெரியவந்துள்ளது. இவர் கடந்த மாதம் அசாமில் இருந்து காணமால் போன நபர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் இளைஞரின் உறவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து அவரை திருச்சூர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.