இந்தியா

எல்லைப் பிரச்னை: உச்ச நீதிமன்றம் செல்ல அசாம் முடிவு

எல்லைப் பிரச்னை: உச்ச நீதிமன்றம் செல்ல அசாம் முடிவு

jagadeesh

மிசோரம் அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட அசாம் அரசு முடிவு செய்துள்ளது.

அசாம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பிரச்சனை நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த நிலையில் கடந்த வாரம் திடீரென வெடித்தது. இதில் இரண்டு மாநில காவல்துறையினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் அசாம் மாநில காவல் துறையைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு மாநிலத்திலும் 50க்கும் மேற்பட்ட காவல்துறையைச் சேர்ந்தவர்கள் படுகாயமடைந்தனர்.

இதுதொடர்பாக அசாம் மாநில முதல்வர் மற்றும் மாநிலத்தின் 6 காவல் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மீது மிசோரம் காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட அசாம் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பேட்டி அளித்துள்ள அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, அசாம் மாநிலத்தின் காடுகளையும் எல்லைகளையும் பாதுகாக்க இந்த நேரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவது தான் ஒரே வழி என கூறியுள்ளார். ஏற்கனவே இரண்டு மாநில எல்லை விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது