இந்தியா

“மருத்துவர்களுக்கு உரியநேரத்தில் சம்பளம் கிடைப்பதை உறுதி செய்க”-உச்சநீதிமன்றம்

“மருத்துவர்களுக்கு உரியநேரத்தில் சம்பளம் கிடைப்பதை உறுதி செய்க”-உச்சநீதிமன்றம்

Veeramani

கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, திரிபுரா, பஞ்சாப். போன்ற மாநிலங்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்காதது குறித்து உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுபற்றி மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கான ஊதியம் பற்றி ஜூன் 17-ஆம் தேதி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது நீதிமன்றம். ஆனால் இதனை சில மாநிலஅரசுகள் பின்பற்றவில்லை என்று மருத்துவர்கள் சங்கத்தின் மனுதாரர் ஆருஷி ஜெயின் வழியுறுத்தினார். நீதிபதிகள் அசோக் பூசன் தலைமையிலான அமர்வு விசாரித்த இந்த வழக்கில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது “ ஜூன் 18 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப்பணியாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் வழங்கவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. ஜூலை 20 ஆம் தேதியே நாங்கள் நினைவூட்டியும் டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், மாநிலங்கள் அதனை முறையாக கடைபிடிக்கவில்லை” என்று தெரிவித்தார்