இந்தியா

மும்பை வெள்ளம்: கலங்கிய கண்களுடன் நடுரோட்டில் அமர்ந்த வியாபாரி! வைரல் புகைப்படம்!

மும்பை வெள்ளம்: கலங்கிய கண்களுடன் நடுரோட்டில் அமர்ந்த வியாபாரி! வைரல் புகைப்படம்!

JustinDurai

மும்பையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் மழையினால், நகர் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஏற்கனவே கொரோனாவால் பரிதவித்து வரும் மும்பை மக்களின் இயல்பு வாழ்க்கை மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மும்பையின் பெண்டி பஜாரில் காய்கறி விற்பனை செய்து வாழ்வாதாரத்தை சமாளிக்கும் 45 வயதான அசோக் சிங், கொரோனா பரவலால் நான்கு மாதங்களாக கடையை திறக்கவில்லை.

கடந்த புதன்கிழமை முதல் முறையாக தனது கடையை திறக்கும் முடிவில் சென்றுள்ளார். ஆனால் அப்பகுதி முழுவதும் மழை வெள்ளம் சூழ்ந்திருந்ததால் கடையை திறக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். சாலையின் நடுவில் தடுப்புச்சுவரில், தலையில் கை வைத்து சோகத்துடன் அமர்ந்துள்ளார் அசோக் சிங்.

கொரோனாவும் வெள்ளமும் சேர்ந்து தனது பிழைப்பில் மண் அள்ளி போட்டு விட்டதே என்ற வேதனை அந்த வியாபாரியை கட்டிப்போட்டிருந்தது. ஊடகவியலாளர் ஒருவர் எடுத்துள்ள இப்புகைப்படம் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அந்த வியாபாரிக்கு பலரும் தற்போது உதவிக்கரம் நீட்டி வருகின்றனர்