இந்தியா

விசாரணையை தொடங்கியது அயோத்தி மத்தியஸ்தர்கள் குழு!

விசாரணையை தொடங்கியது அயோத்தி மத்தியஸ்தர்கள் குழு!

webteam

அயோத்தி வழக்கில் மத்தியஸ்தர்கள் குழுவின் விசாரணை தொடங்கியுள்ளது. 25 மனுதாரர்கள் இந்தக் குழுவின் முன் நேரில் ஆஜராயினர்

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதி மன்றம், சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சமமாகப் பிரித்துக்கொள்ள 2010-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதி பதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழுவையும் நியமித் தது. அதில், வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு ஒரு வார த்தில் தொடங்கி, 8 வாரத்தில் பேசி முடிக்க வேண்டும். சமரசப் பேச்சுவார்த்தை விவரங்களை ஊடகங்கள் வெளியிடக் கூடாது. அதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.

இதையடுத்து இந்தக் குழு, பைசாபாத்தில் உள்ள அவாத் பல்கலைக்கழகத்தில் பேச்சுவார்த்தையை நேற்று தொடங்கியது. இந்த வழக்கின் 25 மனுதாரர்கள், தங்கள் வழக்கறிஞர்களுடன் இந்த குழு முன் ஆஜராகினர். அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இன்றும் பேச்சுவார்த்தை அங்கு நடக்கிறது.