டெல்லி மதுபான விநியோக கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை நவம்பர் 2 ஆம் தேதி கேஜரிவாலுக்கு சம்மன் அனுப்பியது. அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டி வந்தது. கெஜ்ரிவால் 2024 மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாமல் தடுக்க முயற்சி நடைபெறுவதாக அவரது கட்சி வலியுறுத்தி வருகிறது.
இதன் காரணமாகவேதான் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகவில்லை என ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் விளக்கம் அளித்திருந்தனர்.
ஏற்கனவே முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்
இந்நிலையில் முதல்முறை சம்மன் அனுப்பியபோது ஆஜராகாமல் தவிர்த்த அரவிந்த் கெஜ்ரிவால், அடுத்த முறை சம்மன் அனுப்பியபோது, 10 நாள் தியானப்பயிற்சிக்காக சென்று விசாரணையை தவிர்த்தார்.
இந்நிலையில் மூன்றாவது முறையாக இன்றும் அனுப்பப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று ஆஜராக இயலவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் அனுப்பி உள்ளார். விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.