இந்தியா

தேசியக்கொடியின் வண்ணத்தில் முகக்கவசம்: அருணாச்சல் அரசு திட்டம்

தேசியக்கொடியின் வண்ணத்தில் முகக்கவசம்: அருணாச்சல் அரசு திட்டம்

Veeramani

தேசிய உணர்வைத் தூண்டுவதற்காக, அருணாச்சல பிரதேச அரசு மாணவர்களுக்கு தேசியக்கொடியின் மூன்று வண்ணத்தில் 60,000 முகக்கவசங்களை வழங்குகிறது

மாணவர்களிடையே தேசிய உணர்வை வளர்ப்பதற்காக, அருணாச்சல பிரதேச அரசு பள்ளி குழந்தைகளுக்கு விநியோகிக்க ஆயிரக்கணக்கான முகக்கவசங்களை  தேசியக்கொடியின் வண்ணமான மூன்று வண்ணங்களில் வாங்கியுள்ளது. அருணாச்சல பிரதேச அரசின் கொள்முதல் ஆணைப்படி “நவம்பர் 16 முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக காதி மற்றும் கிராம தொழில்துறை ஆணையத்திடம் (கே.வி.ஐ.சி) 60,000 காதி பருத்தி முகக்கவசங்களை வாங்கவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.” என தெரிவித்துள்ளது

தற்போதைய அவசர சூழலை கருத்தில் கொண்டு கே.வி.ஐ.சி வெறும் ஆறு நாட்களில் மாநில அரசுக்கு முகக்கவசங்களை வழங்கியது. சரியான நேரத்தில் இதனை வழங்குவதற்காக கே.வி.ஐ.சி விமானம் மூலம் முகக்கவசத்தை வழங்கியது. எம்.எஸ்.எம்.இ அமைச்சகம் தனது அறிக்கையில், மாணவர்களிடையே தேசிய உணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் என்று தெரிவித்துள்ளது. இந்த முகக்கவசங்களை தயாரிக்க இரட்டை முறுக்கப்பட்ட காதி துணியைப் பயன்படுத்துகிறது, ஏனெனில் இது முகக்கவசத்தில் 70 சதவீத ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது, மேலும் அதன் வழியாக காற்றை எளிதில் செல்ல அனுமதிக்கிறது.