இந்தியா

“சட்டப்பிரிவு 370 திரும்பப் பெறப்படாது”-ரவிசங்கர் பிரசாத்

“சட்டப்பிரிவு 370 திரும்பப் பெறப்படாது”-ரவிசங்கர் பிரசாத்

Veeramani

காஷ்மீர் கொடி மீட்கப்படும் வரை, இந்திய மூவர்ணக்கொடியை  வைத்திருக்க மாட்டேன் என்ற முப்தியின் கருத்துகள் தேசியக் கொடியை அவமதிக்கும் செயல் என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

370-வது பிரிவை ரத்து செய்வது அரசியலமைப்பு ரீதியாக செய்யப்பட்டது, அது திரும்பப்பெறப்படாது. காஷ்மீர் கொடி மீட்கப்படும் வரை, இந்திய மூவர்ணக்கொடியை  வைத்திருக்க மாட்டேன் என்ற மெகபூபா முப்தியின் கருத்துகள் தேசியக் கொடியை அவமதிக்கும் செயல், இது கண்டிக்கத்தக்கது" என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய சட்ட அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட அரசியலமைப்பு மாற்றங்கள் மீண்டும் திரும்பப்பெறப்படும் வரை தேர்தலில் போட்டியிடவோ அல்லது தேசியக் கொடியான மூவர்ணக்கொடியை ஏந்தவோ தனக்கு விருப்பமில்லை என்று மெஹபூபா முப்தி வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தார். முந்தைய காஷ்மீர் மாநிலத்தின் தனிக் கொடி மீட்டெடுக்கப்பட்டால்தான் தான் மூவர்ணத்தை வைத்திருப்பேன் என்றும் அவர் கூறினார்.