இந்தியா

1947 முதல் 2018 வரை காஷ்மீரில் நடந்த சில வரலாற்று திருப்பங்கள்

1947 முதல் 2018 வரை காஷ்மீரில் நடந்த சில வரலாற்று திருப்பங்கள்

webteam

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நேற்று ரத்து செய்யப்பட்டது. அத்துடன் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு- காஷ்மீர் பிரிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைக் கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு- காஷ்மீரும், சட்டப்பேரவையற்ற யூனியன் பிரதேசமாக லடாக்கும் செயல்படும் என அறிவிக்கப்பட்டன. காஷ்மீரைச் சுற்றி நடந்த 72 ஆண்டுகால வரலாறு என்னவென்பதை பார்க்கலாம்.


1947:
பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றது. அதன் பிறகு ஜம்மு- காஷ்மீரின் ஆட்சியாளரான ஹரி சிங்கிடம் பாகிஸ்தான் தொல்லை கொடுக்கத்தொடங்கியது. இதனை அடுத்து ஜம்மு- காஷ்மீர் இணைப்புஒப்பந்தத்தில் ஹரி சிங் கையெழுத்திட்டார். இது இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதலைத் தூண்டியது.

1948:
ஐநாவின் தலையீடு மூலம் இந்தியா - பாகிஸ்தான் மோதல் பேச்சுவார்த்தைக்கு வந்தது. அப்போது ஜம்மு- காஷ்மீர் மக்களின் முடிவுக்கு ஏற்ப இந்தியாவுடன் இணைந்து செயல்பட காஷ்மீர் ஒப்புக்கொள்ளப்பட்டதால் பாகிஸ்தான் வீரர்களை திரும்ப பெற்றது.

1949:
370 வது சட்டப்பிரிவு இந்திய அரசியலமைப்பில் இணைக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது.

1951:
மாநிலத்தின் சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் நடைபெற்றன. ஷேக் அப்துல்லா தலைமையின் கீழ் ஆட்சி அமைக்கப்படுகிறது, ஆனால் அவர் 1953 இல் பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1952:
டெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடலின் படி ஜம்மு- காஷ்மீரின் குடியுரிமையை உறுதிப்படுத்தப்பட்டு விரிவுப்படுத்தப்பட்டது. ஆனால் மாநில அந்தஸ்துக்கான சலுகைகள் அப்படியே தொடரும் என உறுதி அளிக்கப்பட்டது.

1957:
ஜம்மு- காஷ்மீரின் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வருகிறது

1965:
காஷ்மீரை மையமாக வைத்து இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நடத்துகின்றன. ஐ.நா போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.

1989:
ஆப்கானிஸ்தானை சோவியத் ஆக்கிரமிப்பதன் மூலம், படைகளும், ஆயுதங்களும் காஷ்மீருக்குள் நுழைகின்றன. பாகிஸ்தானும் படைகளை இறக்குகிறது. இந்தச் சண்டையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். 

1999:
பாகிஸ்தானின் எல்லை ஊடுருவல்களை அடுத்து கார்கில் எல்லை தொடர்பாக இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவியது.

2010:
17 வயது சிறுவன் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீரில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. 
இதில் 120 பேர் கொல்லப்பட்டனர்.

2015:
பிடிபி கட்சி பாஜகவுடன் கைகோர்த்து ஆட்சி அமைக்கிறது.

2016:
ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி புர்ஹான் வானியின் உயிரிழப்பு மிகப்பெரிய வன்முறையை தூண்டுகிறது. 
இதில் 65 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

2018:
பாஜக, பிடிபி கட்சிகளின் கூட்டணி உடைகிறது. இதனால் ஜம்மு- காஷ்மீர் ஆளுநர் ஆட்சியின் கீழ் வருகிறது.  ஆறு மாதங்களுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டு 2019 டிசம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது.