இந்தியா

சியாச்சின் பனிச்சிகரத்திலிருந்து 130 டன் திடக்கழிவுகள் அகற்றம் 

சியாச்சின் பனிச்சிகரத்திலிருந்து 130 டன் திடக்கழிவுகள் அகற்றம் 

webteam

சியாச்சின் பனிச்சிகரத்திலிருந்து 130 டன் திடக்கழிவுகளை ராணுவம் அகற்றியுள்ளது. 

சியாச்சின் இமய மலையின் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. உலகின் மிக குளிர்ச்சியான பகுதிகளில் சியாச்சினும் ஒன்று. அருகில் பாகிஸ்தான் இருப்பதால் நமது ராணுவ படையினர் பலர் இங்கு தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ராணுவ வீரர்களின் நிலையை மக்கள் பார்வையிட இந்தப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பனிச்சிகரத்தை ராணுவ வீரர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

இதில் 130 டன் திடக்கழிவுகளை இராணுவம் அகற்றியுள்ளது. மொத்தம் 130.18 டன் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்றும் இதில் 48.41 டன் கழிவுகள் மக்கக்கூடியது என்றும்,  40.32 டன் கழிவுகள் மக்காத உலோகம் அல்லாத கழிவுகள் என்றும், 41.45 டன் கழிவுகள்  மக்காத உலோகக் கழிவுகள் எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது. ஒன்றரை வருடங்களாக நடத்தப்பட்ட இந்தத் தூய்மை விழிப்புணர்வு மூலம் 130 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தெரிவித்துள்ள ராணுவம்,பனிப்பாறையில் சேரும் பொருட்கள் எல்லாம், கழிவுப்பொருட்கள் தான் என்பதால் சியாச்சின் சுத்தம் குறித்து பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் மறுசுழற்சி செய்ய ஏதுவான கழிவுகளை மறுசுழற்சி செய்யவும், உலோகம் அல்லாத கழிவுகளை எருவாக மாற்றவும் ராணுவம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.