இந்தியா

சமூக வலைதளங்க‌ளில் கருத்து‌ தெரிவிக்க எதிர்ப்பு... ராணுவ வீரர்களுக்கு எச்சரிக்கை

சமூக வலைதளங்க‌ளில் கருத்து‌ தெரிவிக்க எதிர்ப்பு... ராணுவ வீரர்களுக்கு எச்சரிக்கை

webteam

தங்கள் குறைகளை தெரிவிக்க சமூக வலைதளங்களை பயன்படுத்தும் ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ராணுவ தின நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ராணுவத்திலிருப்பவர்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்கு ஒரு நடைமுறை இருப்பதாக ‌‌குறிப்பிட்டார்‌‌‌‌‌.‌‌ ‌‌‌‌‌‌‌அதில் திருப்தி அடையாதவர்கள் தம்மை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

சமீ‌ப நாட்க‌ளில் ‌‌சில ராணுவ வீரர்கள் சமூக வலைதளங்களில் தங்களுடைய குறைகளை தெரிவித்து வருவதாகவு‌ம் இது எல்லையை பாதுகாத்து வரும் வீரர்க‌ளை பாதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது போல் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பது ஒரு குற்றம் போன்றது என்றும் தண்டனை வழங்கக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார்.