ஜம்மு காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ராணுவ அதிகாரி உட்பட நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் மச்சில் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. சரியாக காலை 1 மணி அளவில் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் நுழைந்ததையடுத்து ராணுவ வீரர்கள் அவர்களுடன் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். அதில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார்.
இந்தச் சண்டை காலை 4 மணிக்கு முடிந்த நிலையில் மீண்டும் 10.20 மணிக்கு துப்பாக்கிச் சூடு தொடங்கியது. இந்தச் சண்டையில் இரண்டுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்ததாகச் சொல்லப்படும் நிலையில் ராணவ வீரர்களின் தரப்பில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.