வடக்கு காஷ்மீரின் மச்சில் செக்டாரில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு தாக்குதலில் மூன்று பாதுகாப்பு படையினர் வீரமரணம் அடைந்தனர். அத்துடன் மூன்று பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தின் எல்லை பாதுகாப்பு பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் கான்ஸ்டபிள் உட்பட மூன்று பாதுகாப்புப் படையினர் வீரமரணம் அடைந்தனர். ஏப்ரல் மாதத்திலிருந்து காஷ்மீரில் நடந்த மிகப்பெரிய மோதல்களில் இதுவும் ஒன்றாகும்.
அதிகாலை ஒரு மணியளவில் நடந்த எல்லைப் பாதுகாப்புப் படையின் ரோந்து பணியின்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய நகர்வுகளைக் கவனித்து, எல்லைபாதுகாப்பு படையினர் மூன்று மணி நேரம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.