இந்தியா

விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்... என்ன ஆனார்கள் அதில் பயணித்தவர்கள்?

webteam

அருணாச்சலப் பிரதேசம் இட்டாநகர், அப்பர் சியாங் மாவட்டத்தில் உள்ள டுட்டிங் தலைமையகத்திலிருந்து 25 கிமீ தொலைவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

இதுதொடர்பாக கிடைத்துள்ள முதற்கட்ட தகவலின்படி இன்று காலை 10:43 மணி அளவில் மலைப்பகுதியில் பறந்து கொண்டு இருந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்தது. தற்போது இணையத்தில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீ பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விபத்து நடந்த பகுதியில் சாலை வசதி இல்லாததால் மீட்பு குழு விரைந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டரில் பயணித்தவர்களின் நிலை மற்றும் விபத்திற்கான காரணம் குறித்த முழுமையான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர், ருத்ரா என்பது இந்திய ராணுவத்திற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) தயாரித்த தாக்குதல் ஹெலிகாப்டர் ஆகும். இது துருவ் அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டரின் (ALH) ஆயுத அமைப்பு ஒருங்கிணைந்த வகையாகும்.

கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி, அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் அருகே பறந்து கொண்டிருந்த இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர், வழக்கமான பயணத்தின்போது விபத்துக்குள்ளானதில் ஒரு விமானி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.