இந்தியா

“வாட்ஸ் அப் பயன்படுத்தாதீர்கள்”- ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தல்

“வாட்ஸ் அப் பயன்படுத்தாதீர்கள்”- ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தல்

webteam

ராணுவ வீரர்கள் வாட்ஸ் அப் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று ராணுவத்தின் சார்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ராணுவ வீரர்களுகளின் சமூக வலைத்தள செயல்பாடுகள் குறித்து ராணுவம் அவ்வப்போது அறிவுறுத்தல்களை அளித்து வருகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதில், “கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களின் மூலம் ராணுவ வீரர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் வேவு பார்க்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளன. அதேபோல ராணுவத்தில் மிகவும் முக்கியமான பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் தங்களது ஃபேஸ்புக் கணக்கை செயலிழக்க செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தற்போது ராணுவத்தில் முக்கியமான பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்களின் வாட்ஸ் அப் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணுவ வீரர் ஒருவரின் வாட்ஸ் அப் எண், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் ஆரம்பித்த குரூப் ஒன்றில் தானாகவே சேர்க்கப்பட்டிருந்தது. இதனைக் கண்டுபிடித்த வீரர் அந்தக் குரூப்பை படம் எடுத்து விட்டு தனது நம்பரை அந்த குரூப்பிலிருந்து நீக்கினார். மேலும் இது தொடர்பாக அவர் ராணுவத்திடம் புகாரும் அளித்தார். அதேபோல பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவ வீரர்களின் வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றத்தை வேவு பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் இந்திய ராணுவம் இந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.