கோகினூர் வைரத்தை இங்கிலாந்திடம் இருந்து மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கிடைத்த 108 காரட் எடையுள்ள கோகினூர் வைரம் பிரிட்டிஷ் அரச குடும்பம் வசம் உள்ளது. கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை ராணி 2ஆம் எலிசபெத் அணிந்திருந்தார். அவர் காலமான நிலையில் உலகின் மிகப்பெரிய வைரங்களில் ஒன்றான கோகினூர் வைரத்தை இந்தியாவிற்கு மீட்டு வருவது குறித்த கோரிக்கைகள் மீண்டும் எழுந்துள்ளன.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி, கோகினூர் வைரத்தை மீட்க ஏற்கனவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்விவகாரத்தை சுமுகமாக முடிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: தற்கொலை செய்துகொண்ட நபர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் அல்ல – தமிழக அரசு தகவல்