ஐஏஎஸ் தேர்வுக்குரிய விண்ணப்பப் படிவம் வெளியாகி உள்ள நிலையில் அதுகுறித்த அறிவிப்புகளையும் யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் UPSC IAS 2023 தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் இன்று வெளியாகி உள்ளது. இந்த தேர்வு குறித்த விவரங்களான தகுதி, தேர்வு முறை, காலியிடங்கள், பாடத்திட்டம், தேர்வு தொடர்பான விதிகள், விருப்பப் பாடங்களின் பட்டியல் என அனைத்து விவரங்களும் அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த தேர்வுக்குத் தயாராகும் அனைத்து மாணவர்களும் UPSC அதிகாரப்பூர்வ இணையதளம் upsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புவதற்கான கடைசி தேதி பிப்ரவரி 21. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பது தொடர்பாக UPSC பல அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய விவரங்கள் இதோ...
UPSC தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
UPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் (upsconline.nic.in) செல்லவும்.
தேர்வு அறிவிப்பு குறித்த விவரத்தை கிளிக் செய்யவும்.
பின்னர், ஆன்லைன் லிங்கை கிளிக் செய்து, விண்ணப்பிக்கவும்.
சிவில் சர்வீசஸ் பகுதி-I பதிவில் கிடைக்கும் இணைப்பைத் தேடி, அதைக் கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவ வழிமுறைகளை கவனமாகப் பார்த்து, ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.
தேவையான அனைத்து விவரங்களையும் நீங்கள் பூர்த்தி செய்தவுடன் ’தொடரவும்’ என்பதைக் கிளிக் செய்யவும். அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, பின்னர் ’சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்யவும்.
இணைக்கப்பட வேண்டியவை எவை?
யுபிஎஸ்சி குறிப்பிட்டுள்ளபடி ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கையொப்பம்.
செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை சான்று மற்றும் விவரங்கள்.
உங்களுடைய கல்வி மற்றும் தனிப்பட்ட விவரங்கள்.
ஆன்லைன் கட்டண விவரங்கள்.