இந்தியா

ஆந்திர எம்.எல்.ஏ கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிப்பு

ஆந்திர எம்.எல்.ஏ கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிப்பு

webteam

ஆந்திர எம்.எல்.ஏ கிடாரி சர்வேஸ்வர ராவ் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு கையில் எடுத்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் தெலுங்கு தேச எம்.எல்.ஏவாக இருந்தவர் கிடாரி சர்வேஸ்வர ராவ். இவர் கடந்த செப்டம்பர் மாதம் தும்ரிகுடா பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது திடீரென மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர். இதில் சர்வேஸ்வராவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இந்தத் தாக்குதலில் முன்னாள் எம்.எல்.ஏ கிசேரி சோமாவும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், பெண் தலைமையிலான மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.

அந்தப் பெண் மாவோயிஸ்ட் அருணா என்கிற வெங்கடரவி சைதன்யா என்பது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாட்டின் நலன் கருதி இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைத்துள்ளதாக ஆந்திரபிரதேச டிஜிபி ஆர்.பி தாக்கூர் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ள 4 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்கனவே சந்தித்து விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.