இந்தியா

”சார் என்னோட டிக்கெட் தொலைஞ்சு போச்சு” விமானத்தில் பயணிக்க இளைஞர் செய்த செயல்!

”சார் என்னோட டிக்கெட் தொலைஞ்சு போச்சு” விமானத்தில் பயணிக்க இளைஞர் செய்த செயல்!

EllusamyKarthik

ஆந்திராவின் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். 21 வயது இளைஞர். விமானத்தில் பயணிப்பது என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். அது அவரது கனவாகவும் இருந்துள்ளது.

அண்மையில் அதை நிஜமாக்கியதோடு, நாடு முழுவதும் விமானத்தில் சுற்றி வந்துள்ளார்.

ஆனால் அந்த பயணக் கட்டத்திற்கான தொகையை அவர் செலுத்தாமல் தன்னுடன் பயணிக்கின்ற சக பயணிகளை கட்ட செய்துள்ளார். அது எப்படி?

ஆன்லைனில் முன்கூட்டியே அந்த விமான பயணத்திற்கான டிக்கெட்டை மலிவான விலையில் வாங்கும் வாடிக்கை கொண்ட தினேஷ் அதனை வேண்டுமென்ற விமான நிலையத்தில் தொலைத்து விடுவாராம். பயணச் சீட்டு தொலைந்து விட்டதாக சொல்லி சக பயணிகளை நம்ப வைத்து, அவர்கள் கொடுக்கின்ற பணத்தில் அடுத்த விமனத்திற்கான டிக்கெட்டை அதிக விலை கொடுத்து வாங்குவாராம். அதோடு மீதமிருக்கும் தொகையை கை செலவுக்கு வைத்துக் கொள்வாராம். 

இதே பாணியை கடைப்பிடித்து பல ஊர்களுக்கு பயணித்து வந்த அவரை, அவரிடம் ஏமாந்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்து விசாரித்துள்ளனர். 

“விஜயவாடா டூ ஹைதராபாத் தான் தினேஷ் இப்படி பயணித்த முதல் வழித்தடம். தொடர்ந்து டெல்லி, மும்பை, பெங்களூரு மாதிரியான ஊர்களுக்கு பயணித்துள்ளார். அங்கு ஊரை சுற்றி விட்டு மீண்டும் ஊர் திரும்ப இதே வழியை கடைபிடித்துள்ளார். அவரது சமூக வலைத்தளங்களில் அப்லோட் செய்யப்பட்ட படங்களே இதற்கு சான்று. அவரது பெற்றோரிடம் விசாரித்ததில் இந்த விவரங்கள் எதுவும் அவருக்கு தெரியவில்லை. இதற்கு முன்னதாக இது மாதிரியான சீட்டிங் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்” என போலீசார் தெரிவித்துள்ளனர்.