இந்தியா

சீனா இந்தியா இடையே போர் மூண்டால் பாகிஸ்தான் சீனாவுடன் கூட்டு சேரும்: பஞ்சாப் முதல்வர்

சீனா இந்தியா இடையே போர் மூண்டால் பாகிஸ்தான் சீனாவுடன் கூட்டு சேரும்: பஞ்சாப் முதல்வர்

Veeramani

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போர்மூண்டால், பாகிஸ்தானும் சீனாவுடன் சேர்ந்துகொள்ளும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.

மத்திய அரசு  இராணுவத்தை இன்னும்  பலப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள  பஞ்சாப்  முதல்வர்  கேப்டன் அமரீந்தர் சிங், "எனது வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். சீனாவுடனான எந்தவொரு போரும் பாகிஸ்தானுடனான  ஒரு கூட்டுப் போராகவே இருக்கும்" என்றார்.  லடாக்கில் சீன ஊடுருவல்களைப் பற்றி விவாதித்த அவர், "நாம் மிகவும் சிறந்த நிலையில் இருக்கிறோம் . சீனர்கள் நம்மை வெல்லலாம் என்று நினைத்தால்  அது அவர்களின்  முட்டாள்தனமான யோசனையாக  இருக்கும்" என்றார்