இந்தியா

திரையரங்கில் தேசிய கீதத்தை இசைத்து என்ன சாதிக்க போகிறோம்?: அனுராக் கஷ்யாப்

திரையரங்கில் தேசிய கீதத்தை இசைத்து என்ன சாதிக்க போகிறோம்?: அனுராக் கஷ்யாப்

webteam

திரைப்படத்திற்கு முன் தேசிய கீதத்தை இசைத்து என்ன சாதிக்க போகிறோம்? என  பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யாப் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் தேசியகீதம் இசைப்பதை கட்டாயமாக்கி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் என பல குரல்கள் ஒலித்தன. ஆனால் தன்னுடைய உத்தரவை மாற்ற உச்சநீதிமன்றம் மறுத்தது. நாட்டுப்பற்றை நிரூபிக்க பலஇடங்கள் இருக்கும்போது, அதனை திரையரங்கில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் என்ன என ஒருசாரார் கேள்வி எழுப்பினர். மற்றொரு தரப்போ இதில் என்ன தவறு இருக்கிறது..? ராணுவ வீரர்கள் தினமும் தேசியகீதத்தை இசைத்து மரியாதை செய்யும் போது சினிமா பார்க்கும் முன் எழுந்து நிற்பதில் என்ன தவறு..? என எதிர்க்கேள்வி கேட்டார்கள்.

இந்நிலையில் நேற்று மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் தேசியகீதம் இசைப்பது கட்டாயமல்ல, விரும்பும் திரையரங்கு இசைக்கலாம் என உச்சநீதிமன்றம் மாற்றிக்கொண்டது. இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யாப் இதுகுறித்து தனது கருத்தை இன்று வெளியிட்டுள்ளார். அதில், “படம் போடுவதற்கு முன் தேசியகீதத்தை இசைத்து, எழுந்து நின்று மரியாதை செய்து எதை சாதிக்க போகிறோம்; அப்படி எதுவும் நடக்கவில்லை; கடைசியில் நீதிமன்றமே இதனை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.