இந்தியா

தங்கச் செயின் திருட்டு; ஆனால் வழக்கு இல்லை - ஏன் தெரியுமா?

தங்கச் செயின் திருட்டு; ஆனால் வழக்கு இல்லை - ஏன் தெரியுமா?

ஜா. ஜாக்சன் சிங்

தங்கச் செயினை மனிதர்கள் திருடினால் வழக்கு பதியலாம்; கைது செய்யலாம். ஆனால் எறும்புக் கூட்டம் இந்தக் காரியத்தை செய்தால் போலீஸாரால் என்ன செய்ய முடியும்?

பொதுவாகவே எறும்புகள் தனது எடையை விட 20 மடங்கு அதிக எடைக்கொண்ட பொருட்களையும் தூக்கிச் செல்லும் திறன் கொண்டவை. சில சமயங்களில் மூன்று எறும்புகள் மட்டுமே சேர்ந்து பெரிய அளவிலான பூச்சிகள், மிட்டாய்கள் உள்ளிட்டவற்றை இழுத்துச் செல்வதை நமது வீட்டிலேயே பார்த்திருப்போம். ஆனால், தங்க செயினை அலேக்காக ஆட்டையை போடும் எறும்புக் கூட்டத்தை யாரேனும் பார்த்திருக்கிறீர்களா?

இந்திய வனத்துறை அதிகாரி (ஐஎஃப்எஸ்) சுசந்தா நந்தா ஒரு சூப்பர் வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், 50-க்கும் மேற்பட்ட எறும்புகள் சேர்ந்து ஒரு பெரிய தங்கச் செயினை வேகமாக இழுத்துச் செல்கின்றன. இந்த வீடியோவை பார்த்த நெட்டீசன்கள் பலரும், விதவிதமான ஜாலியான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு கமெண்ட்டில், "குட்டி தங்கக் கடத்தல்காரர்கள். இவர்கள் மீது எந்தப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப் போகிறீர்கள்" என ஒருவர் கேட்டுள்ளார். இன்னொரு கமெண்ட்டில், "வழக்கு பதிவு செய்வதற்கு முன்பு அவர்களின் பாலினத்தை தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களாக இருந்தால் ஒன்றும் செய்ய வேண்டாம். தங்கத்தை வைத்திருப்பது அவர்களின் உரிமை. அதே சமயம், ஆண்களாக இருந்தால் விசாரணையே தேவையில்லை ஸ்பாட்டிலேயே என்கவுண்ட்டர் செய்து விடுங்கள்" என ஒருவர் கூறியுள்ளார்.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Tiny gold smugglers <br>The question is,under which section of IPC they can be booked? <a href="https://t.co/IAtUYSnWpv">pic.twitter.com/IAtUYSnWpv</a></p>&mdash; Susanta Nanda IFS (@susantananda3) <a href="https://twitter.com/susantananda3/status/1541768973381177344?ref_src=twsrc%5Etfw">June 28, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

பொழுதுபோக்கு வீடியோவாக இது இருந்தபோதிலும், "கூட்டு முயற்சியும் (டீம் ஒர்க்), கடின உழைப்பும் இருந்தால் இந்த உலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை" என்பதை இந்த எறும்புகள் நமக்கு உணர்த்தி விடுகின்றன.