இஸ்ரோவின் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனத்துடன் வணிக உறவுகளை கொண்டிருந்த தேவாஸ் நிறுவனம் போலி என சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேவாஸ் நிறுவனத்தின் தலைவர் ராமச்சந்திரனை இஸ்ரோவின் அப்போதைய தலைவர் மாதவன் நாயரை சந்தித்ததாகவும் அமெரிக்காவில் இருமுறை சந்திப்பு நிகழ்ந்ததாகவு்ம சிபிஐ கூறியுள்ளது. இச்சந்திப்புக்கு பின்பே ஆண்ட்ரிக்ஸிடமிருந்து எஸ் பேண்டு அலைவரிசையை தேவாஸ் நிறுவனம் குத்தகைக்கு எடுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.
தேவாஸ் நிறுவனத்துக்கு மொரிஷியஸ் மற்றும் சிங்கப்பூரிலிருந்து 13 கோடி டாலர்கள் அதாவது 840 கோடி ரூபாய் அன்னிய முதலீடாக வந்ததாகவும் சிபிஐ கூறியுள்ளது. ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் தேவாஸுக்கு அலைவரிசை குத்தகைக்கு விட்ட விவகாரத்தில் அரசுக்கு 578 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.