இந்தியா

டி.ஆர்.டி.ஓ உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து - அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல்

டி.ஆர்.டி.ஓ உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து - அவசர பயன்பாட்டிற்கு ஒப்புதல்

Veeramani

டி.ஆர்.டி.ஓ  உருவாக்கிய கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு, நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய பாதுபாப்பு ஆராய்ச்சி மையம் எனும் டிஆர்டிஓ ஆய்வகம் மற்றும் ஹைதராபாத்தில் இயங்கும் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்கள் 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் (2-டிஜி) மருந்தின் பார்முலாவுடன் கோவிட் எதிர்ப்பு மருந்தினை உருவாக்கியது. இந்த மருந்து பொடி வடிவில் பாக்கெட்டுகளில் கிடைக்கும் என்றும்,  அதை தண்ணீரில் கரைத்து வாய்வழியாக எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மருந்துகளின் கட்டுப்பாட்டு மூலக்கூறு, கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளை விரைவாக மீட்டெடுக்க உதவுகிறது மற்றும் ஆக்ஸிஜன் சார்புநிலையை குறைக்கிறது என்பதை மருத்துவ சோதனை முடிவுகள் காட்டிய பின்னர் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் (டி.சி.ஜி.ஐ) இம்மருந்துக்கு ஒப்புதல்ளித்தது என கூறப்பட்டிருக்கிறது.  இம்மருந்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளில் நோயாளிகளிடம் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.