இந்தியா

மீண்டும் போராட்டத்தை தொடங்கும் ஹசாரே!

மீண்டும் போராட்டத்தை தொடங்கும் ஹசாரே!

webteam

லோக் ஆயுக்தாவை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தை தொடங்கவுள்ளதாக அன்னா ஹசாரே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், லோக்பால் மாசோதாவை மத்திய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றி 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஆனால் இதுவரையிலும் லோக்பால் குறித்த நடவடிக்கையை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

அதுமட்டுமின்றி மத்தியில் மோடி அரசு ஆட்சி அமைத்து 3 ஆண்டுகள் நிறைவடைந்தும், லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா உள்ளிட்ட விதிமுறைகளை இதுவரை நடைமுறை படுத்தவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவை வலியுறுத்தி தனது போராட்டத்தை டெல்லியில் மீண்டும் தொடங்கப்போவதாகவும், அதற்கான தேதி விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தின் போது விவசாயிகள் பிரச்சனைக்கான தீர்வும், வலியுறுத்தப்படும் என ஹசாரே குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு ஊழலை ஒழிக்க வேண்டும் என டெல்லியில் ஹசாரே நடத்திய போராட்டத்தின் எதிரொலியால், நாடாளுமன்றத்தில் 2013ஆம் ஆண்டு லோக்பால் மசோதா நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.