அனில் அம்பானி pt web
இந்தியா

அடிமேல அடிமேல அடி... திவால் நிலையை எட்டிய அனில் அம்பானி மீண்டு வரும் கதை..

அம்பானி குடும்பம்னா இந்தியாவுல மட்டுமல்ல.. உலகத்துலயும் யாருக்கும் தெரியாம இருக்க முடியாது.. இதுல முகேஷ் அம்பானி உலக பணக்காரர் பட்டியல்ல இருக்குற நிலையில, பெரிய நஷ்டத்துல இருந்து மீண்டு வராரு அவரோட தம்பி அனில் அம்பானி...

PT WEB

செய்தியாளர் கௌசல்யா

அனில் அம்பானி

அம்பானி குடும்பம்னா இந்தியாவுல மட்டுமல்ல.. உலகத்துலயும் யாருக்கும் தெரியாம இருக்க முடியாது. இதுல முகேஷ் அம்பானி உலக பணக்காரர் பட்டியல்ல இருக்குற நிலையில, பெரிய நஷ்டத்துல இருந்து மீண்டு வராரு அவரோட தம்பி அனில் அம்பானி... திவால் நிலைய பதிவு செஞ்ச அனில் அம்பானி எப்படி மீண்டு வராரு... இந்த கட்டுரையில பார்க்கலாம்...

இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியல்ல முகேஷ் அம்பானி இருக்குறது ஒருபுறமென்றால், அவரோட உடன்பிறப்பான அனில் அம்பானி, ஏகப்பட்ட பிரச்னைகள சந்திச்சிட்டு இருக்காரு. 2008ஆம் ஆண்டு அனில் அம்பானி உலக பணக்காரர் பட்டியல்ல 6ஆவது இடத்துல இருந்தார். அப்போது அவரோட சொத்துமதிப்பு, இன்றைய ரூபாய் மதிப்புல சுமார் 33,600 கோடி. இவ்வளவு சொத்து மதிப்போட இருந்த அனில் அம்பானிதான், கடந்த 2020ஆம் ஆண்டுல பிரிட்டிஷ் நீதிமன்றத்துல திவால் நிலைய பதிவு செஞ்சாரு.

ஆயிரக்கணக்கான கோடி கடன்களால அவரோட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்படும் சூழலில் இருந்தும் அதிலிருந்து விடுபட போராடின. கடன் கொடுத்த சீன வங்கிகள் உள்ளிட்டவையும் கிடுக்குபிடி போட்டன.

தலைகீழாக மாறிய நிலைமை

இந்தச்சூழல் இப்படியே நிக்கல.. முயற்சிய கைவிடாம இருந்தா.. எல்லா நிலையும் மாறும்ன்னு சொல்லுவாங்கல்ல.. அப்படித்தான் 2023ஆம் ஆண்டுல ரிலையன்ஸ் பவர் நிறுவனம் அதன் கடன்கள திருப்பி செலுத்த தொடங்கிச்சு. 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக 1,023 கோடி ரூபாய் கடன திருப்பி செலுத்தியதா கூறப்படுது. தொடர்ந்து... ஆகஸ்ட் மாதத்துல 800 கோடி என சமீபத்தில் 3,872 கோடி ரூபாய வங்கிகள்ல செலுத்தி கடனில்லா நிலைய எட்டிருச்சு.

இந்த தகவல்களாலதான் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் சமீபகாலமா விலை ஏற்றம் கண்டு வருது. சமீப நாட்கள்ல அந்நிறுவனத்தோட பங்குகள் 35 சதவிகிதம் வர உயர்ந்திருக்கு. கடந்த ஆண்டு அக்டோபர்ல ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தோட ஒரு பங்கின் விலை 15 ரூபாய் 53 காசுகள் என ஓராண்டில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சிய சந்திச்சுது. அந்நிறுவனத்தின் சந்தைமதிப்பும் 6,238 கோடியா குறைஞ்சிடுச்சு. அடிமேல அடின்னு சொல்லுவாங்கல்ல அதுதான் அப்போ அனில் அம்பானியோட நிலமை.. ஆனா இப்ப நிலைமை தலைகீழா மாறிடுச்சு. ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தோட ஒரு பங்கு விலை சுமார் 44 ரூபா. சந்தைமதிப்பு 17 ஆயிரம் கோடி ரூபாயா உயர்ந்திருக்கு. நிறுவனத்தோட கடனில்லா நிலை முதலீட்டாளார்களுக்கு நம்பிக்கைய ஏற்படுத்தியிருக்குன்னே சொல்லலாம்.

10 ஆண்டுகளுக்கு மேலா பல்வேறு போராட்டங்கள சந்திச்சு வந்த அனில் அம்பானி முயற்சிய கைவிடாம முயன்றதால, இப்போ முன்னேற்றப் பாதையை மீண்டும் எட்டி இருக்கிறாரு...! மகன்களோட உதவியுடன் தொழில மீண்டும் மீட்டெடுத்து வராருன்னுதான் சொல்லனும்.