அனில் அம்பானி எக்ஸ் தளம்
இந்தியா

பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு தடை.. ரூ.25 கோடி அபராதம்.. செபி அதிரடி!

இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானியின் நிறுவனம் உட்பட 24 நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகள் செபி அமைப்பு தடை விதித்துள்ளது.

Prakash J

முதலீட்டாளர்களின் நிதியை அனில் அம்பானி தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானியின் நிறுவனம் உள்ளிட்ட 24 நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகள் செபி அமைப்பு தடை விதித்துள்ளது.

மேலும், பங்குச்சந்தையில் உள்ள எந்த நிறுவனத்திலும், இயக்குநராகவோ, நிர்வாகத்திலோ அனில் அம்பானி இருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, கட்டுப்பாட்டாளர் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பத்திரங்களை சந்தையில் இருந்து ஆறு மாதங்களுக்கு தடை செய்து ரூ.6 லட்சம் அபராதம் விதித்துள்ளது செபி.

இத்துடன் ரிலையன்ஸ் யூனிகார்ன் எண்டர்பிரைசஸ், ரிலையன்ஸ் எக்ஸ்சேஞ்ச் நெக்ஸ்ட் லிமிடெட், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் லிமிடெட், ரிலையன்ஸ் கிளீன்ஜென் லிமிடெட், ரிலையன்ஸ் பிசினஸ் பிராட்காஸ்ட் நியூஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் பிக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் போன்ற பல நிறுவனங்களுக்கும் ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:“தோனியின் பெயரைச் சேர்க்காமல் தவறு செய்துவிட்டேன்” - வருத்தம் தெரிவித்த தினேஷ் கார்த்திக்!