Angel Tax PT Web
இந்தியா

மத்திய பட்ஜெட்டில் ரத்து செய்யப்பட்ட ஏஞ்சல் வரி! ஏஞ்சல் வரி என்றால் என்ன?

PT WEB

ஏஞ்சல் வரி

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எனப்படும் புத்தாக்க நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த வரிதான் இது. புத்தாக்க நிறுவனங்கள், அதன் சந்தை மதிப்பை விட அதிகமான முதலீடுகளை ஈர்த்தால், ஏஞ்சல் வரி விதிக்கப்பட்டது. முதலீட்டாளர்களிடமிருந்து பங்குகள் விற்பனை மூலம் நிதி கோரும் தனியார் புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள், வருமான வரித்துறைக்கு வரி செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது.

அதாவது, முதலீட்டாளர்களிடம் பங்கு விற்பனை மூலம் திரட்டப்படும் தொகை, நியாய விலையை விட அதிகமாக இருந்தால், அதிகப்படியாக உள்ள தொகைக்கு வரி விதிக்கப்பட்டது. பிற ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட வருமானம் என்ற வகையில், வருமானவரிச் சட்டத்தின் 56ஆம் பிரிவு 2ன் கீழ் 30.9 விழுக்காடு வரிவிதிக்கப்பட்டது.

இந்த வரிக்கு, ஏஞ்சல் வரி என்று பெயர். தற்போது தாக்கல் செய்யப் பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில், ஏஞ்சல் வரி, முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்த ஏஞ்சல் வரி, முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப் பட்டிருப்பதன் மூலம் புத்தாக்க நிறுவனத்தினர் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். ஏஞ்சல் வரி விலக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய சீர்திருத்தம் என்று புத்தாக்க நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.