சந்திரபாபு நாயுடு கோப்புப் படம்
இந்தியா

ஆந்திரா: சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன்!

தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு, ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Prakash J

இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியில் ஊழல்

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது 2015 ஆம் ஆண்டு இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் ரூ.3,350 கோடி திட்டத்துக்கு மாநில அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த திட்டத்தில் மாநில அரசு 10 சதவீத பங்கை செலுத்த வேண்டும். ஆனால், மாநில அரசின் பங்குத் தொகையில் ரூ.240 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. போலி பில் மற்றும் இன்வாய்ஸ்கள் மூலம் ஜிஎஸ்டியை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

சந்திரபாபு நாயுடு

சிறையில் அடைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு!

இந்தத் திட்டத்துக்கான செலவை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே பகிர்ந்தளிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக (ரூ.371 கோடியில் ரூ.241 கோடி ஊழல் நடந்துள்ளதாக), சி.ஐ.டி. 2017-18 ரிமாண்ட் அறிக்கையில் கூறப்பட்டது. மேலும், கடந்த காலங்களில் சிஐடி வழக்குகளை பதிவு செய்த 26 பேருக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில், ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் உள்ளார்.

முன்ஜாமீன் வழங்கிய ஆந்திர உயர்நீதிமன்றம்

இவருடைய கைதை கண்டித்து மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. பலரும், இவரது கைதுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், சிலர் சிறையில் இருந்த சந்திரபாபுவைச் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த நிலையில், அமராவதி உள்வட்ட சாலை மோசடி வழக்கு மற்றும் அங்கல்லு கலவர வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆந்திர உயர்நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதில் அமராவதி உள்வட்ட சாலை வழக்கில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் வரும் 16ஆம் தேதி வரை சந்திரபாபு நாயுடுவை கைது செய்யக்கூடாது என இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.