இந்தியா

ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு... செப்டம்பர் 21ம் தேதி வகுப்புகள் தொடக்கம்

ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு... செப்டம்பர் 21ம் தேதி வகுப்புகள் தொடக்கம்

webteam

ஆந்திர மாநிலத்தில் நான்காவது ஊரடங்கு தளர்வுகளுடன் செப்டம்பர் 21-ம் தேதி 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரின் அனுமதிக் கடிதத்தை எடுத்துவரவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நான்காவது கட்ட ஊரடங்கு தளர்வு நிபந்தனைகளைக் கடைபிடித்து ஆந்திர அரசு, செப்டம்பர் 21 ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் 9 மற்றும் பத்தாம் வகுப்புகளுக்கான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

இன்டர்மீடியட் என அழைக்கப்படும் பிளஸ் 1, பிளஸ் 2, ஜூனியர் கல்லூரிகளையும் திறக்கலாம் எனக் கூறியுள்ளது. அதேபோல பிஎச்டி படிப்பிற்கான வகுப்புகளும் சில கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்படுகின்றன.

மேலும், செப்டம்பர் 21 ம் தேதி முதல் நூறு பேர் பங்கேற்கக்கூடிய அளவில் அரசியல், கல்வி, விளையாட்டு, மதம் தொடர்பான கூட்டங்கள் நடத்தலாம். திறந்தவெளி திரையரங்குகளைத் திறக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.