இந்தியா

''பிரதமர் யார் என கூடிப் பேசி முடிவு'' : சந்திரபாபு நாயுடு

''பிரதமர் யார் என கூடிப் பேசி முடிவு'' : சந்திரபாபு நாயுடு

webteam

மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிக‌ள் ‌அதிக தொகுதிகளில் வெல்லும் என்றும் தங்களுக்குள் யார் பிரதமர் என்பது கூடிப்பேசி முடிவு செய்யப்படும் என்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

மத்தியில் ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் முயற்சி எடுத்து வருகின்றனர். மே 23-ல் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே ஒரு அணியை உருவாக்கி பாஜகாவிற்கு அதிர்ச்சியளைக்க முனைபில் தீவரமாக முயற்சியை மேற்கொள்கிறார் சந்திரபாபு நாயுடு.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் எதிர்க்கட்சிகள் தரப்பில் இருக்கும் எல்லா தலைவர்களுமே மோடியை விட சிறந்தவர்கள் என்றார். தேர்தல் முடிவுகள் வந்ததும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ‌ஒன்றுகூடி பேசி பிரதமரை முடிவு செய்வார்கள் என்று அவர் தெரிவித்தார்‌. மம்தா பிர‌தமராக முன்னிறுத்தப்படுவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த சந்திரபாபு நாயுடு, அது குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை என்றார். எனினும் தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் நிச்சயம் இல்லை என்றும் ஆனால் பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி‌யில் ஒருங்கிணைப்பாளராக இருப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.