இந்தியா

ஆந்திர தலைநகரை மாற்றுவது தொடர்பான முடிவை ஒத்திவைத்த அமைச்சரவை

ஆந்திர தலைநகரை மாற்றுவது தொடர்பான முடிவை ஒத்திவைத்த அமைச்சரவை

jagadeesh

ஆந்திர தலைநகரை மாற்றுவது குறித்த விவகாரத்தில் முடிவெடுப்பதை அந்த மாநில அமைச்சரவை ஒத்திவைத்துள்ளது.

அமராவதியை சட்டப்பேரவை இருக்கும் தலைநகராகவும் விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகரமாகவும் கர்னூலை நீதித்துறை தலைநகரமாகவும் அமைக்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டிருந்தார். மாநில தலைநகரை மாற்றியமைப்பது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு சில பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.

அமைச்சரவையில் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதனிடையே, அமராவதியை மாநிலத்தின் தலைநகராக அமைப்பதற்கு விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தை அளித்திருந்தனர். ஆனால், மூன்று தலைநகரங்களை அமைக்க ஆந்திர அரசு முனைப்புக் காட்டி வருவதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட பிறகு ஆந்திர தலைநகரை மாற்றலாம் என அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.