இந்தியா

கலைந்து செல்லுமாறு போராட்டக்காரர்களின் காலில் விழுந்த டி.எஸ்.பி.

webteam

ஆந்திர மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்கள் என்ற முடிவை எதிர்த்து அமராவதியில் போராட்டம் நடத்தியவர்களின் காலில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அமராவதி சட்டப்பேரவை தலைநகராகவும் விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகராகவும் கர்னூல் நீதித்துறை தலைநகராவும் உருவாக்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியிருந்தார். ஆனால், அமராவதியை தலைநகராக்கும் திட்டத்திற்காக நிலங்கள் வழங்கிய விவசாயிகளும் பொதுமக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த திட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

எனினும், அமராவதியின் மண்டாடம் பகுதியில் நடந்த போராட்டத்தில் தங்களின் போராட்டத்தை கலைக்கவேண்டாம் என காவல்துறை துணை கண்காணிப்பாளர் வீரா ரெட்டியின் காலில் சில போராட்டக்காரர்கள் விழுந்தனர். இதற்கு ஒத்துக்கொள்ளாத வீர ரெட்டி போராட்டக்காரர்களின் கால்களில் விழுந்து கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டது அங்கிருந்தவர்ளை ஆச்சரியப்படுத்தியது.