சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ஆந்திராவில் அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு அக்கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மங்களகிரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு...
“கடந்த ஆட்சியின் போது திருப்பதி மலையின் புனிதத்தை கெடுத்து விட்டார்கள். லட்டு பிரசாதம் தயார் செய்ய முழுவதுமாக கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய்யை லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது” பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும் பேசுகையில், “ஆனால், எங்களது ஆட்சியில் தரமான பொருட்களை பயன்படுத்தி பிரசாதங்கள் தயாரித்து வருகிறோம். கடந்த ஐந்தாண்டுகளில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அரசு ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கு உரிய தண்டனை அவர்களுக்கு கிடைக்கும்” என்றும் சந்திரபாபு நாயுடு உறுதிபட தெரிவித்தார்.