இந்தியா

2 ரூபாயில் தானியங்கி கதவு - பாராட்டிய ஆனந்த் மகேந்திரா

webteam

வித்தியாசமாக கதவை மூடும் தானியங்கி ஒன்றை ஒருவர் கண்டுபிடித்துள்ளார் என்று ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். 

வித்தியாசமான வீடியோக்கள் மற்றும் மனிதர்கள் குறித்து ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்தவகையில் தற்போது ஒரு விநோதமான கண்டுபிடிப்பு என்று ஒரு வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டில் அவர், “சமீபத்தில் எனக்கு வாட்ஸ் அப்பில் இந்த வீடியோ வந்தது. நமது அன்றாட வாழ்க்கை பிரச்னைக்கு ஒரு அரிய வகை கண்டுபிடிப்பு. பொதுவாக ஒரு கதவை தானாக மூட ஹைட்ராலிக் இயந்திரத்திற்கு ரூ 1500 செலவு செய்யவேண்டும். ஆனால் இந்த நபர் வெறும் 2 ரூபாய் செலவில் ஒரு வித்தியாசமான தானாக மூடும் கதவு ஒன்றை செய்துள்ளார். இந்த மாதிரியான கிரியேட்டிவிட்டிக்கு நாம் என்ன சொல்லப்போகிறோம்” என்று பதிவிட்டுள்ளார். 

இந்த வீடியோவில் ஒருவர் தனது வீட்டு கதவின் மேல் தண்ணீர் பாட்டிலில் நீரை நிரப்பி அதனை கதவிற்கு பின்னால் நூலை மாட்டி தொங்கவிட்டுள்ளார். இந்த ஏற்பாடு கதவு திறந்தப் பின் தானாக கதவை திரும்பி மூட செய்கிறது. இந்தப் பதிவு ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அத்துடன் இந்த வீடியோவை பலர் பாராட்டி தங்களின் பதிவை செய்துள்ளனர்.