நண்பர்களுக்கும் உத்தரவாதம் அளிக்கும் விதமாக குடும்ப உறுப்பினர்களுடன் அவர்களையும் சேர்த்து காப்பீடு எடுக்கும் முறைக்கு காப்பீட்டு நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுள்ளன.
இதுதொடர்பாக, ரெலிகேர் ஹெல்த் இன்சூரன்ஸ், மேக்ஸ் பூபா ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் கோட்டக் மஹிந்திரா ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இந்த மாதத் தொடக்கத்தில் ஒப்புதலைப் பெற்றுள்ளன. அதன்படி, வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் அவர்களின் நண்பர்களையும் இணைத்து ஒரே மருத்துவக் காப்பீட்டை எடுக்க இயலும்.
நண்பர்களையும் இணைத்து காப்பீடு எடுக்கும் முறையை பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் சோதனை அடிப்படையில் 6 மாதங்களுக்கு செயல்படுத்த காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐ.ஆர்.டி.ஏ அனுமதி வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த முறையில் எடுக்கும் காப்பீட்டில், காப்பீட்டுத் தொகையை கோராமல் இருந்தால் அடுத்த ஆண்டு செலுத்தும் பிரீமியம் தொகையில் 15 சதவிகிதம் குறைவாக செலுத்தலாம் போன்ற சலுகைகளை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கியுள்ளன.