(கோப்பு புகைப்படம்)
ஒடிசாவை சேர்ந்த 86 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து மீண்டு மக்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார்.
ஒடிசா மாநிலம் ஜெய்ப்போர் மாவட்டம் கட்டிகட்டா கிராமத்தைச் சேர்ந்த 86 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து 22 கிலோ மட்டுமே எடை கொண்ட அந்த மூதாட்டி சிகிச்சைக்காக புவனேஷ்வரில் உள்ள எஸ்.யு.எம் மருத்துவமனையில் கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், 14 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார். நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஸ் செய்யப்பட்டார் மூதாட்டி..
இதற்கிடையில் ஜெய்ப்போர் மாவட்டத்தில் 3 வயது குழந்தைகள் 2 பேர், நீரிழிவு நோய் உடைய 60 வயது முதியவர் உள்பட 14 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு எஸ்.யு.எம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கட்டிகட்டா கிராமத்தில் ஏற்கெனவே சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெய்ப்போர் மாவட்டத்தில் மொத்தம் 71 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 38 பேர் சிகிச்சையில் உள்ளனர். மீதியுள்ள 27 பேர் சிகிச்ச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.