கேரள அரசால் நடத்தப்பட்டுவரும் கள்ளுக்கடைகளில் விற்கப்படும் கள்ளில், அதிக போதைக்காக கஞ்சா ஜூஸ் கலக்கப்பட்டிருக்கும் அதிர்ச்சித் தகவல் ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
கேரள மாநில முழுவதும் உள்ள 3,500க்கும் மேற்பட்ட கள்ளுக் கடைகள், அம்மாநில சுங்கத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. அங்கு கள் போதைப் பொருளாக இல்லாமல் உணவுப் பொருளாக கருதப்படுவதால், கொரோனா காலத்தில் கள்ளுக்கடைகள் தடையின்றி செயல்பட்டு வருகின்றன.
குற்றச்சாட்டுகளின்பேரில் நடத்தப்பட்ட ஆய்வில் 192 கடைகளில் விற்கப்பட்ட கள்ளில் கஞ்சா ஜூஸ் கலக்கப்பட்டிருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 67 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கும் அதிகாரிகள், தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.