புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்குவதாக இந்தி நடிகர் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். தாக்குதலில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க நடிகர் அமிதாப் பச்சன் முன்வந்துள்ளார். பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்குவதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி வருவதாக கூறியுள்ளார்.
இந்ததொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் விரைவாக வழங்குவது குறித்து பல்வேறு மாநிலங்களின் அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். பயங்கரவாத தாக்குதல் காரணமாக, கிரிக்கெட் வீரர் விராட் கோலி அறக்கட்டளை நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.