திருமயம் கோவில் புதியதலைமுறை
இந்தியா

அமித்ஷா வருகை தரும் திருமயம் சத்தியகிரீஸ்வரர் கோயிலின் ஆச்சர்ய பின்னணி!

PT WEB

பிரதமர் மோடியைத் தொடர்ந்து அமித்ஷாவும் இன்று தமிழகம் வருகை. புதுக்கோட்டையில் உள்ள சத்தியகிரீஸ்வரர் கோயில் சிறப்பு பூஜையில் பங்கேற்கிறார்...

உத்திரபிரதேசம் வாரணாசியிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு பிற்பகல் 3 மணிக்கு வந்தடைகிறார். பிறகு அங்கிருந்து தனி ஹெலிகாப்டர்மூலம் கானாடுகாத்தான் ஹெலிபேடில் வந்திறங்கியபின் சாலை மார்க்கமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள குடவரைக்கோயிலான சத்தியகிரீஸ்வரர் கோயிலுக்கு செல்ல இருக்கிறார். அங்கு அரைமணிநேரம் சிறப்பு பூஜையில் கலந்துக்கொண்டுவிட்டு பிறகு ஆந்திராவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

ஏற்கனவே திட்டமிட்டு கேன்சல் ஆக பயணம்!

திருமயம் சத்திய கிரீஸ் வரர் கோயிலுக்கு இன்னைக்கு அமித் ஷா சாமி கும்பிட வர்றார். அஷ்டமி அன்னைக்கு அந்த கோயில் சாமி கும்பிட்டா நினைச்சது நடக்கும்னு ஒரு நம்பிக்கை இருக்கு. அதனாலதான் வர்றாரு. தவிர அவரோட மூதாதையார் வந்து வழிபாடு செஞ்சதாவும் சொல்றாங்க. ஏற்கனவே வர இருந்து ட்ரிப் கேன்சல் ஆகி இப்போ வர்றாரு. திருமயம் கோட்டைக்கு காவல் இருந்த கோட்டை பைரவர்.

திருமயம் கோட்டை கோயிலின் பின்னணி!

திருமயம்... இந்த ஊர் திருச்சியிலிருந்து காரைக்குடி செல்லும் வழியில் அமைந்துள்ளது. திருமயம் கோட்டையானது 40 ஏக்கர் பரப்பளவுக்கு அமைந்திருக்கும் . கோட்டையின் கீழ், சைவ வைணவ திருத்தலங்கள் உள்ளது. இத்திருத்தலங்கள் ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட ஒரு குடவரைக்கோயில். சைவர்களும் வைணவர்களுக்கும் உள்ள ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் சத்தியகிரீஸ்வரர் என்ற சிவன் கோவிலும், அதற்கு அடுத்ததாக 108 திவ்யதேசத்தில் ஒன்றான சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் அமைந்திருக்கும். இதில் மகேந்திரவர்மன் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது அதில் இசையைப்பற்றிய விவரம் உள்ளது. ஆனால் அது முழுதாக கிடைக்கவில்லை.

அதற்கு பிறகு 15 நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் இக்கோட்டையும் கோவில்களும் மேலும் விஸ்தரிக்கப்பட்டது. அதன் பிறகு வந்த சேதுபதி மன்னர்களும் திருமயத்தை தனது தலைநகரங்களுள் ஒன்றாக மாற்றிக்கொண்டு ஆட்சி செய்து வந்தனர்.

இன்றும் இக்கோட்டையை தாண்டிதான் பேருந்து செல்லவேண்டும் கோட்டையின் வாயிலில் பைரவர் சிலை ஒன்று உள்ளது அது கோட்டையின் காவல் தெய்வமாக கருதப்பட்டது. இன்றும் அதை தாண்டி செல்லும் பேருந்துகளும், தனியார் வாகனங்களும் கோட்டை வாசலில் நிறுத்தி அந்த பைரவருக்கு கற்பூரம் ஏற்றி கும்பிட்டுவிட்டு செல்வதை காணலாம் .