அமித் ஷா புதிய தலைமுறை
இந்தியா

"எங்கள் ஆட்சியில் பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்கவிடுவோம்" - அமித் ஷா பேச்சு

”எங்கள் ஆட்சியில் பசுக்களை வதைப்பவர்களை தலைகீழாகத் தொங்கவிடுவோம். பசுவதை மற்றும் பசுக் கடத்தலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என அமைச்சர் அமித் ஷா பேசியிருப்பது தேர்தல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்டமாக வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடைபெற இருக்கும் பிற தொகுதிகளில் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையாற்றி வருகின்றனர். அந்த வகையில், இன்று (மே 16) பீகார் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பரப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இது சீதாவின் மண்; இங்கு பசுவதையை நாங்கள் ஏற்க மாட்டோம். எங்கள் ஆட்சியில் பசுக்களை வதைப்பவர்களை தலைகீழாகத் தொங்கவிடுவோம். பசுவதை மற்றும் பசுக் கடத்தலை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதே மோடியின் உத்தரவாதம்” எனப் பேசியிருப்பது தேர்தல் களத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமித் ஷா பேசியது குறித்து கேட்க இந்த வீடியோவைப் பார்க்கவும்.

இதையும் படிக்க: ”ரூ.20,000 மேல் ரொக்கமாக கடன் வழங்கக்கூடாது” - நிதி நிறுவனங்களுக்கு RBI அதிரடி உத்தரவு