இந்தியா

தனிஷ்க் மீதான சிறு தாக்குதல் மூலம் சமூக நல்லிணக்கத்தை உடைக்க முடியாது : அமித் ஷா

தனிஷ்க் மீதான சிறு தாக்குதல் மூலம் சமூக நல்லிணக்கத்தை உடைக்க முடியாது : அமித் ஷா

sharpana

சமீபத்தில் வெளியான தனிஷ்க் ஜுவல்லரி நிறுவனத்தின் விளம்பரம் சர்ச்சையானது. அந்த விளம்பரத்தில் இந்துமத கர்ப்பிணி பெண்ணுக்கு அவரது இஸ்லாமிய மாமியார் வளைகாப்பு நடத்துவதுபோன்ற காட்சிகள் ‘இது லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பதுபோல் இருக்கிறது’ என்று பலர் கண்டனம் தெரிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் ‘boycott tanishq’ என்ற ஹேஷ்டாக்கும் ட்ரெண்டிங்கும் ஆனது. எதிர்ப்புகள் கிளம்பியதால், தனிஷ்க் நிறுவனம் அந்த விளம்பர வீடியோவை  அனைத்துப் பக்கங்களிலிருந்தும் நீக்கியது. விளம்பரத்தை தனிஷ்க் நிறுவனம் நீக்கியதற்கு காங்கிரஸ் எம்பி சசிதரூர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த அமித் ஷாவிடம் தனிஷ்க் விளம்பரம் சர்ச்சை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு “ இந்த சிறு தாக்குதல்கள் மூலம் இந்தியச் சமூக நல்லிணக்கத்தை உடைக்க முடியாது. இது மிகவும் வலுவான ஒரு கயிறு, இதை அறுக்க யாராலும் முடியாது.  பிரிட்டிஷ் மற்றும் காங்கிரஸ் கூட இதை உடைக்க முயன்றன.  ஆனால் அது உடையவில்லை. இது போல அளவுக்கு மீறிய செயல்பாடுகளை தவிர்க்கலாம். எனவே இது குறித்து நாம் எவ்வித கவலையும் கொள்ள வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.