பாஜகவின் தேர்தல் வெற்றி நாட்டை புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா, பிரிவினைகளைக் கடந்து வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரமாகவே இந்த வெற்றியைக் கருதுவதாகத் தெரிவித்தார். வெற்றிக்குப் பாடுபட்ட தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய அமித் ஷா, பிரதமர் மோடிக்கும் நன்றி கூறினார். பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியமைக்கும் என்று தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றி, நாட்டை புதிய பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றும் அமித்ஷா குறிப்பிட்டார். உத்தரப்பிரதேச முதலமைச்சர் குறித்து பாஜகவின் நாடாளுமன்ற குழு கூடி நாளை முடிவெடுக்கும் என்று குறிப்பிட்ட அவர், திறமை அடிப்படையில் முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.