இந்தியா

பெகாசஸ் விவகாரம்: அமித் ஷா பதவி விலக ராகுல் காந்தி வலியுறுத்தல்

பெகாசஸ் விவகாரம்: அமித் ஷா பதவி விலக ராகுல் காந்தி வலியுறுத்தல்

jagadeesh

செல்போன்கள் வேவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.

அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, 'பெகாசஸ்' இஸ்ரேலிய அரசால் ஆயுதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் இது பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.

ஆனால், பிரதமரும் உள்துறை அமைச்சரும் இதனை இந்திய அரசுக்கு எதிராகவும், நிறுவனங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தி உள்ளனர் என்று ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். மக்களின் குரல்களை எழுப்பும் எதிர்க்கட்சித் தலைவரான தனது செல்போன் ஒட்டுக்கேட்கப்பட்டது தனி உரிமை சம்பந்தப்பட்ட விசயம் அல்ல - மக்களின் குரல்கள் மீதான தாக்குதல் என்று ராகுல் சாடினார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார்.